நெடுஞ்சாலை துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்


நெடுஞ்சாலை துறையினர்
கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம், நவ. 7-
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், சேலம், குரங்குச்சாவடியில் உள்ள, சேலம் கோட்ட அலுவலகம் முன் மண்டல அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதில் சாலை பணியாளர்களின், 41 -மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தல்; சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் இருந்து, 10 சதவீதம் ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கு ஊதி நுாதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர்கள் தங்கராஜ், தேவன், ஜாகீர் உசேன், சுப்பிரமணியன், சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement