தொழிலதிபர்களுக்கு நெருக்கடி: சொல்கிறார் ராகுல்

15

புதுடில்லி: '' பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் புகழ வேண்டும் என நேர்மையாக தொழில் செய்யும் தொழிலதிபர்களுக்கு மூத்த அமைச்சர் நெருக்கடி கொடுத்து வருகிறார்,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது: கிழக்கு இந்திய கம்பெனி நாட்டை விட்டு வெளியேறி, 150 ஆண்டுகள் ஆகியும் அது விதைத்த ஏகாதிபத்தியம் என்ற அச்சம் தற்போது புதிய வடிவில் உள்ளது. அனைவருக்கும் தொழில் செய்வதற்கு வாய்ப்பை தரும் முற்போக்கான வணிகத்திற்கு நேரம் வந்துவிட்டது. தொழிலதிபர்களுக்கு நாங்கள் ஆதரவு ஆக இருப்போம் எனக்கூறியிருந்தார். இந்த கட்டுரைக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பத்திரிகையில் எனது கட்டுரை வெளியான பிறகு, நேர்மையாக தொழில் செய்யும் பல தொழில் அதிபர்கள் என்னை தொடர்பு கொண்டனர். அப்போது, மூத்த அமைச்சர் ஒருவர் தங்களை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு குறித்து நல்ல விதமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட வேண்டும் என நெருக்கடி கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். இது எனது கருத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement