லடாக் ரோந்து பணியில் முட்டுக்கட்டையா?: இந்திய ராணுவம் மறுப்பு

புதுடில்லி: லடாக்கின் கிழக்கு எல்லைப்பகுதியான டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் ரோந்து பணியில், இரு தரப்பிலும் முட்டுக்கட்டை ஏதும் இல்லை என இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய ராணுவம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிழக்கு லடாக்கின் டெப்சாங்,டெம்சோக்கில் ரோந்து பணிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவப் பேச்சுக்கள் முட்டுக்கட்டை அடைந்துள்ளதாக வெளியான செய்திகள் உண்மையில்லை. தடைகள், ஆட்சேபனைகள் எதுவும் எதிர்கொள்ளப்படவில்லை.



கடந்த மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஒப்பந்தத்திற்குப் பிறகு ஒப்புக்கொண்டபடி, மீண்டும் ரோந்து செல்வதையும், ஒருமித்த கருத்துடன் திட்டமிட்ட முறையில் செயல்படுத்துவதிலும் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.

ராணுவம் தொடர்பான முக்கியமான விவகாரங்களில், உண்மைகளை ஊடக நிறுவனங்கள் வெளியிட வேண்டும். இது போன்ற உணர்ச்சிகரமான கட்டுரைகளை வெளியிடுவதற்கு முன், சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள், உண்மைகளை சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன, மேலும் ஆதாரமற்ற அல்லது தவறான தகவல்கள் எதுவும் பரப்பப்படாமல் இருக்க வேண்டும். டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய இரு பகுதிகளிலும் ரோந்துப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement