அடிப்படை வசதியின்றி வாழைத்தார் மண்டி
அடிப்படை வசதியின்றி வாழைத்தார் மண்டி
கரூர், நவ. 8-
கரூர், வாழைத்தார் மண்டியில் அடிப்படை வசதி இல்லாமல் வியாபாரிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
கரூர் ரயில் ஸ்டேஷன் அருகில், வாழைத்தார் மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, காட்டுப்புத்துார், மோகனுார், வாங்கல், வேலாயுதம்பாளையம், வேலுார், குளித்தலை உட்பட பல இடங்களில் காவிரிக்கரையோரம் விளைவிக்கப்படும், பல்வேறு ரக வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகிறது. தினமும் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாலையோரத்தில் வைத்து வியாபாரம் நடந்து வருகிறது. சாலை ஓரத்தில் வாழைத்தார்களை இறக்கி வைப்பதால், அவை வெயிலிலும், மழையிலும் வீணாகிறது. மேலும், வாழைத்தார்களை பாதுகாக்கும் வசதி இல்லை. இங்கு வருபவர்களுக்கு சுகாதாரமான கழிப்பிட வசதி கிடையாது. இந்த மண்டி எந்தவிதமான அடிப்படை வசதி இன்றி இயங்கி வருகிறது.
எனவே, வாழைத்தார்களை விற்பனை செய்யவும், பாதுகாப்பாக வைக்கவும் போதுமான இடவசதி செய்து தர வேண்டும் என, வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.