ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய கழிவுநீரால் அவதி
திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜாகோவில் தெரு, சதாசிவ லிங்கேஸ்வரர் கோவில் எதிரே ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மற்றும் மக்கள் நடந்தும் சென்று வருகின்றனர். குறிப்பாக மேட்டுத் தெருவில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் சுரங்கப்பாதையில் அதிகளவில் வாகனங்கள் சென்றவாறு இருக்கும்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக சுரங்கப்பாதையில் நகராட்சி கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் சுரங்கப்பாதை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, சுரங்கப்பாதையில் கழிவுநீர் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement