ஓரியூர் தோட்டக்கலை பண்ணையில் ஆய்வு

திருவாடானை: ஓரியூர் தோட்டக்கலை பண்ணையை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு தேவையான பழக்கன்றுகளை வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார்.

நம்புதாளையில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டடம், கலியநகரி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நடக்கும் பணிகள், வட்டாணம் ஊராட்சியில் முதல்வரின் கிராமச் சாலைகள் திட்டம், பனஞ்சாயல் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டடத்தை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து ஓரியூரில் அரசு தோட்டக்கலை பண்ணையை ஆய்வு செய்தார். விவசாயிகளுக்கு தேவையான பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் போதுமான அளவில் வளர்த்து மானிய விலையில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தாசில்தார் அமர்நாத், பி.டி.ஓ.,க்கள் கணேசன், ஆரோக்கிய மேரிசாராள், ஊராட்சி தலைவர்கள் பனஞ்சாயல் மோகன்தாஸ், நம்புதாளை பாண்டிசெல்வி, கலியநகரி உம்முசலிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement