13 முதல் 15 வரை ரேஷன் கடைகளை அடைக்க முடிவு
சிவகங்கை:தமிழகத்தில், வரும் 13 முதல், 15 வரை அனைத்து ரேஷன் கடைகளையும் அடைத்து, ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலர், கே.ஆர்.விஸ்வநாதன் கூறினார். அவர் கூறியதாவது:
ரேஷன் கடைகளை நிர்வகிக்க தனித் துறையை ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களை பொட்டல மாக தர வேண்டும் உட்பட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதுவரை அரசு, எங்களை அழைத்துப் பேசவில்லை.
எனவே அரசும், கூட்டுறவுத் துறை அதிகாரிகளும் அழைத்துப் பேசி தீர்வு காணாவிட்டால், நவ., 13 முதல் 15 வரை மாநில அளவில் உள்ள 24,000 ரேஷன் கடைகளில், 16,000 ரேஷன் கடை விற்பனையாளர், எடையாளர்கள் கடைகளை அடைத்து ஸ்டிரைக்கில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement