பயிர்க்கடன் கால தாமதம் குறித்து விவசாயிகள் புகார் அளிக்கலாம்
ராமநாதபுரம்: மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன் பெறுவதில்கால தாமதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வட்டார அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் அளிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்போது விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.
எனவே மூவிதழ் அடங்கல் சான்று, கூட்டுறவு வங்கி கணக்கு புத்தகம், சிட்டா நகல், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல், 4 பாஸ்போர்ட் போட்டோ ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து விவசாயிகள் பயிர்க்கடன் பெறலாம்.
இதில் சந்தேகம், காலதாமதம் ஏற்பட்டால் கீழ்கண்ட அலைபேசி எண்களில் வட்டார அலுவலர்கள், அதிகாரிகளை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
பரமக்குடி- 90806 87859, கமுதி - 94426 78728, கடலாடி - 63806 34983, நயினார்கோவில், போகலுார் - 88701 00565, முதுகுளத்துார்- 63836 55852, ராமநாதபுரம் - 97903 81412, மண்டபம் - 99522 06840, திருப்புல்லாணி - 90031 64644, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் - 88386 68780, துணைப்பதிவாளர்கள் ராமநாதபுரம் - 73387 21602, பரமக்குடி -73387 21603, மண்டல இணைப் பதிவாளர் 73387 21600.