வீடியோவில் கவர்ச்சி பேச்சு பணம் பறித்த பெண் கைது

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த 60 வயதான வியாபாரிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் வாட்ஸாப் மூலம் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. எர்ணாகுளத்தில் ஒரு விடுதியில் தங்கி படிப்பதாகவும், கல்வி கட்டணம் கட்ட 10,000 ரூபாய் தர முடியுமா என, அப்பெண் கேட்டார். வியாபாரியும் அனுப்பினார்.

தொடர்ந்து இருவரும் அலைபேசியில் பேசி வந்தனர். பெண் பணம் கேட்ட போதெல்லாம் வியாபாரி கொடுத்து வந்தார்.

இந்நிலையில் திடீரென வாட்ஸாப் வீடியோ அழைப்பில் அப்பெண் நிர்வாணமாக போஸ் கொடுத்து, கவர்ச்சியாக பேசினார்.

மறுநாள் வியாபாரியை அழைத்த பெண், வீடியோ அழைப்பை காண்பித்து உறவினர்களுக்கு அனுப்பாமல் இருக்க, பணம் தர வேண்டும் என மிரட்டினார். பல தவணைகளாக 2.50 கோடி ரூபாய் வரை வியாபாரி அனுப்பினார்.

இத்தகவலை அறிந்த வியாபாரி மகன், திருச்சூர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, கொல்லம் அருகே கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஷெமி, 38, அவரது கணவர் சோஜன் போஸ், 32, ஆகியோரை நேற்று கைது செய்தனர். திருச்சூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement