தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி மரணம்

வேலுார்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 35, கூலித் தொழிலாளி. இவரது மகள் லத்திகா, 5, அருகில் உள்ள அரசு பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டில் இருந்த, திறந்த நிலையிலான, 6 அடி ஆழ தண்ணீர் தொட்டியில், தவறுதலாக அந்த சிறுமி விழுந்து விட்டார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறிது நேரம் கழித்து மகளை தேடிய போது, தொட்டியில் மிதந்தார்.

அவரை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார்; பெற்றோர் அலறி துடித்தனர். குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement