குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம்
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழையின்றி நீர்மட்டம் குறைய துவங்கியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் அணைக்கு வெகுவாக நீர் வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் உயர்ந்து நவ.6ல் 125 அடியை எட்டியது. அதன்பின் கடந்த இரண்டு நாட்களாக மழையின்றி 1346 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 751 கன அடியாக குறைந்தது. நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 124.90 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் சாகுபடிக்காக 1100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3598 மில்லியன் கன அடியாகும்.
தொடர்ந்து மழை பெய்து நீர்மட்டம் 130 அடிக்கு மேல் உயரும் பட்சத்தில் 2ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement