சிவகாசியில் பாலிபேக் நிறுவனத்தில் தீ விபத்து
சிவகாசி: சிவகாசி ஞானகிரி ரோட்டில் பாலிபேக் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.
சிவகாசி ஞானகிரி ரோட்டில் சத்தியசீலனுக்கு சொந்தமான திருப்பதி கலர் மேக்கிங் என்ற பெயரில் பாலிபேக் நிறுவனம் உள்ளது. இங்கு பிளாஸ்டிக் பைகளில் நிறுவனங்களின் பெயர்கள் அச்சடிக்கும் பணி நடக்கிறது. நேற்று மதியம் 12:40 மணியளவில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. பிளாஸ்டிக் பைகள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி கரும்புகை சூழ்ந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement