ஏரியில் மூழ்கி இறந்த சிறுவர்கள் நிவாரணம் கோரி பெற்றோர் மனு
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் இறந்ததால் நிவாரண உதவி கேட்டு துணை முதல்வரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.
விழுப்புரத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி விட்டு, வெளியே வந்த துணை முதல்வர் உதயநிதியிடம், கண்டாச்சிபுரம் தாலுகா மணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மனைவி கலைமதி கோரிக்கை மனுவை அளித்தார்.
அதில், எங்கள் மகன்கள் ஜீவிதரன்,10; தர்ஷன்,8; ஆகியோர் கடந்த அக்டோபர் 3ம் தேதி கோட்ட மருதுார் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி இறந்தார். இது தொடர்பாக தமிழக முதல்வரின் நிவாரண உதவிதொகை வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளோம்.
தற்போது வரை எந்தவித நிவாரண தொகையும் வழங்கப்படவில்லை. எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானதாகும். தள்ளு வண்டியில் இட்லி வியாபாரம் செய்து பிழைக்கிறோம். தற்போது எங்கள் 2 பிள்ளைகளையும் இழந்து கஷ்டமான சூழலில் வாழ்கிறோம். முதல்வரின் நிவாரண உதவிதொகை வழங்கி உதவ வேண்டும். நான் 10ம் வகுப்பு பயின்றுள்ளதால் எனது கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி ஏதாவது வழங்கி உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.