பாகூர், கிருமாம்பாக்கத்தில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் திடீர் ஆய்வு
பாகூர்: பாகூர் மற்றும் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் நேற்று காலை பாகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, போலீஸ் நிலையத்தில் பராமறிக்கப்படும் பதிவேடுகள் பார்வையிட்டு, புகார் மனுக்கள் மீதான விசாரணை நிலை, ரோந்து வாகனங்களை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும், நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனையை பெற்றுத்தர அறிவுறுத்தினார்.
பின் அவர் கிருமாம்பாக்கம் சட்டம் ஒழுங்கு, மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு புறப்பட்டு சென்றார்.
ஆய்வின்போது பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித்,சப் இன்ஸ்பெக்டர் நந்தக் குமார், விஜயக்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
திடீர் ஆய்வு
வழக்கமாக காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஆனால், பாகூர் போலீஸ் நிலையத்தில், நேற்று டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் நடத்திய ஆய்வு குறித்து எந்த தகவலும் முன்கூட்டியே தெரிவிக்காமல் திடீர் ஆய்வு மேற்கொண்டது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.