உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற இந்தியாவுக்கு தகுதி: புடின் உறுதி
மாஸ்கோ: '' உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம் பெற இந்தியாவுக்கு தகுதி உள்ளது,'' என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புடின் பேசியதாவது: இந்தியாவை சந்தேகத்திற்கு இடமின்றி வல்லரசு நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்தியாவின் 150 கோடி மக்கள், மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை விட வேகமாக இருக்கும் வளர்ச்சி, பண்டைய கலாசாரம், வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் ஆகியவை காரணமாக இப்பட்டியலில் இடம்பெற இந்தியாவுக்கு தகுதி உள்ளது.
அனைத்து திசைகளில் இருந்தும் இந்தியா உடன் உறவை வளர்த்து வருகிறோம். இந்தியா மிகச்சிறந்த நாடு. 150 கோடி மக்கள் தொகையுடன், ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி மக்கள் அங்கு பிறக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியில் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. இவ்வாறு புடின் பேசினார்.
வாசகர் கருத்து (5)
RAJ - dammam,இந்தியா
08 நவ,2024 - 22:06 Report Abuse
புடின் இந்தியாவின் சிறந்த நண்பர்.. வாழ்க புடின்..
0
0
Reply
A P - chennai,இந்தியா
08 நவ,2024 - 21:52 Report Abuse
வேறு ஒரு பெரிய நாட்டின் தலைவரின் கூற்றான இதனை ஒரு திராவிட கொத்தடிமை கூட ஏற்றுக்கொள்ள மாட்டாரே
0
0
Reply
சமூக நல விருப்பி - ,இந்தியா
08 நவ,2024 - 20:54 Report Abuse
நன்றி புடின் அவர்களே நீங்கள் எந்த அளவு இந்தியாவை பற்றி தெரிந்து வைத்து இருக்கிறார்கள். எப்படி இந்தியா பற்றி செய்திகளை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து மதிக்கிறீர்கள் என்பதை நினைக்கும் போது நீங்கள் உயர்ந்து காணப்படுகிறீர்கள். . மோடிஜி உங்களை மட்டும் அல்ல உலக தலைவர்கள் அனைவரையும் மிகுந்த அன்புடன் நேசிக்கிறார். ஜெயஹிந்த்
0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
08 நவ,2024 - 20:43 Report Abuse
மோடியின் சிறப்பான ஊழலே இல்லாத அரசின் செயல்பாடுகளால் இப்போது புடின் போன்றோர் போற்றுகின்றார் இந்தியாவையும்.அதன் தலைவர் மோடிஜியையும். பெருமையாக சொல்வோம் இந்தியன் என்று
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
08 நவ,2024 - 20:36 Report Abuse
அப்படி இடம் பெற்றாலும், இந்தியா உலக அமைதிக்காகத்தான் பாடுபடும். ஒரு சில நாடுகள் போல எல்லா நாட்டு தனிப்பட்ட விஷயத்திலும் மூக்கை அனாவசியமாக நுழைக்காது.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement