திட்டக்குடி திருக்குளத்தில் கல் பதிக்கும் பணி தீவிரம்
திட்டக்குடி : திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளம் சீரமைக்க, கல் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
திட்டக்குடியில் பழமை வாய்ந்த அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் திருக்குளம் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. கடந்த 2022ல் ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது. திருக்குளம் சீரமைக்க இந்துசமய அறநிலையத்துறை சார்பில், ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அதில், திருக்குளம் சுற்றுச்சுவர், நடைபாதை பணி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement