ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்
மேட்டுப்பாளையம்; ரயில் பாதை சீர் செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் மலை ரயில் நேற்று முதல் ஓடத் துவங்கியது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும், காலை,7:10 மணிக்கு ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. குன்னூர் மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் கல்லாறுக்கும் குன்னுாருக்கும் இடையே உள்ள, மலைப்பகுதி ரயில் பாதையில், பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன.
இதனால் கடந்த, 3ம் தேதியிலிருந்து, 7ம் தேதி முடிய, ஊட்டி மலை ரயில் சேவையை, ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.
ரயில் பாதையில் இருந்த மண் மற்றும் பாறைகளை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இதையடுத்து ஐந்து நாட்களுக்கு பின், நேற்று காலை, 7:10 மணிக்கு வழக்கம் போல், ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement