உள்நாட்டினர் உதவினால் உண்டு

1

• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் தலா ஒரு சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டன.


• உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது சரிவுடன் துவங்கியது. பின்னர், சிறிது நேரத்தில் ஓரளவு சமாளித்து ஏற்றம் கண்டது. பிற்பகல் வரை ஊசலாட்டம் நீடித்த நிலையில், அதன்பின் மளமளவென சரிவைக் கண்டது. இதனால், சந்தை நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டது.


• நிப்டி குறியீட்டில், அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கம் கண்டன. குறிப்பாக, பிரிட்டானியா பங்கு 7.30 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., பங்குகள் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையில் 1,235 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும்; 2,734 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்துடனும்; 92 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

• அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது தொடரும் சூழலில், சந்தை கடும் வீழ்ச்சியை அடையாமல், உள்நாட்டு முதலீட்டாளர்கள் கைகொடுத்து வருகின்றனர்.



அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 3,024 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.



கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 0.56 சதவீதம் அதிகரித்து, ஒரு பேரலுக்கு 72.23 அமெரிக்க டாலராக இருந்தது.


ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 1 பைசா குறைந்து, 84.39 ரூபாயாக இருந்தது.



டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 டிரென்ட்
 சன் பார்மா
 எச்.சி.எல்.,டெக்

 இன்போசிஸ்

அதிக இறக்கம் கண்டவை

 பிரிட்டானியா
 பெல்
 என்.டி.பி.சி.,
 ஏசியன் பெயின்ட்
 எச்.டி.எப்.சி.,வங்கி

Advertisement