முன்னாள் தலைமை நீதிபதி ஊட்டி மலை ரயிலில் பயணம்

குன்னுார் : ஊட்டி - குன்னுார் மலை ரயிலில், நாட்டின், 46வது தலைமை நீதிபதி (ஓய்வு) ரஞ்சன் கோகோய், பயணம் மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு நேற்று முன்தினம் நாட்டின், 46வது தலைமை நீதிபதி (ஓய்வு) மற்றும் ராஜ்யசபா எம்.பி., யான ரஞ்சன் கோகோய் வருகை தந்தார். ஊட்டி, ஜே.எஸ்.எஸ்., பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நேற்று பகல், 12:15 மணிக்கு, ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு, சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலைரயிலில், அவர் குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டார். மதியம், 1:20 மணிக்கு குன்னுார் வந்த அவர், 'ஹைபீல்டு' பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதிக்கு சென்று, உணவு உட்கொண்ட பின், காரில் ஊட்டிக்கு சென்றார். இவர் வருகையை ஒட்டி, குன்னுார், ஊட்டி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Advertisement