65 கிலோ சந்தன மரக்கட்டைகள் கடத்தல்; 7 பேர் கொண்ட சர்வதேச கும்பல் கைது; வனத்துறையினர் அதிரடி

திருவனந்தபுரம்: 'கேரளாவில் வனத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 65 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 7 பேர் கொண்ட சர்வதேச கும்பல் கைது செய்யப்பட்டனர்.


கேரளாவில் சந்தன மரக்கட்டைகளை கடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. கோழிக்கோடு வனத்துறை அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் மலப்புரத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த, காரில் சோதனை நடத்தினர். அப்போது சந்தன மரக்கட்டைகள் கடத்தப்படுவதை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இடம் 25 கிலோ சந்தன மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். டிரைவர் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.

மற்றொரு சம்பவம்



அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில், பெரம்பரை அடுத்துள்ள கல்லானோடு, கூராச்சுண்டு பகுதியில் சட்டவிரோதமாக சந்தனக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. கல்லானோடு நோக்கி பைக்கில் சந்தன மரங்களை கடத்தி சென்ற, இருவரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.



அவர்களிடம் இருந்து பைக், 40 கிலோ சந்தன மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தல் கும்பல் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இவர்கள் சந்தன மரக்கட்டைகளை கடத்தி விற்பனை செய்வது யாருக்கு? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement