தி.மு.க. , சேர்மன் பதவிக்கு ஆளுங்கட்சியினரே , ' ஆப்பு? '

''சீட் இல்லன்னு நாசுக்கா சொல்லிட்டாரு பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய். ''யாருக்கு, எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி. ''ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.,வில் கிளைச் செயலரா துவங்கி, அமைச்சர் வரை படிப்படியா உயர்ந்தவர் தோப்பு வெங்கடாசலம்...தலைமையுடன் ஏற்பட்டமனக்கசப்பால, 2021ல் தி.மு.க.,வுல சேர்ந்துட்டாரு பா...


''வர்ற சட்டசபை தேர்தல்ல, பெருந்துறை தொகுதியில் போட்டியிட முயற்சி பண்ணிட்டு இருக்காரு... ஆனா, இதை மாவட்ட அமைச்சரும், மூத்த நிர்வாகிகளும் விரும்பல பா... ''சமீபத்துல, பெருந்துறை தொகுதியில் நடந்த தி.மு.க.,வினர் ஆலோசனை கூட்டத்துல பேசிய அமைச்சர் முத்துசாமி, 'இந்த தொகுதி, ஏதாவது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படலாம்... அப்படி ஒதுக்கினா, அனைவரும் ஒற்றுமையா வேலை பார்த்து வெற்றியை தேடித் தரணும்'னு சொன்னாரு பா...


''இந்த கூட்டத்துக்கு, வெங்கடாசலத்துக்கு அழைப்பும் இல்ல... தனக்கு 'சீட்' இல்லன்னுஅமைச்சர் நாசுக்கா சொல்லிட்டதால, வெங்கடாசலம் கடும் விரக்தியில இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய். ''டி.ஐ.ஜி., பணியிடம்ஆறு மாசமா காலியா கிடக்கறது ஓய்...'' என்றகுப்பண்ணாவே தொடர்ந்தார்...


''காஞ்சிபுரம் போலீஸ்சரகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்னு மூணுமாவட்டங்கள் இருக்கு...மூணும், சென்னையை ஒட்டியே இருக்கு ஓய்... ''இந்த மாவட்டங்கள்ல,70க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களும்,சில ஆயிரம் போலீசாரும்இருக்கா... இந்த சரக டி.ஐ.ஜி., பணியிடம், ஆறு மாசமா காலியா கிடக்கறது ஓய்...


''இங்க டி.ஐ.ஜி.,யா இருந்த பொன்னி, இடமாறுதல்ல போனபிறகு, வேற யாரையும் நியமிக்கல... முதல்ல விழுப்புரம் டி.ஐ.ஜி.,யும்,இப்ப வடக்கு மண்டலஐ.ஜி.,யும் கூடுதல் பொறுப்பா இதை பார்க்கறா ஓய்... ''இதனால, இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம், 'சஸ்பெண்ட்' போன்ற பைல்கள்ல பொறுப்பு அதிகாரிகளிடம்கையெழுத்து வாங்க, மூணு மாவட்ட போலீசாரும், வெட்டியா அலையறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.


''நகராட்சி சேர்மன் பதவியை காலி பண்ணப்போறாங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி. ''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''திருச்சி மாவட்டம்,மணப்பாறை நகராட்சிசேர்மனா, தி.மு.க.,வைச்சேர்ந்த மைக்கேல் இருக்காரு... இந்த நகராட்சியை, முதல்ல அ.தி.மு.க., தான் பிடிச்சுது... அப்புறமா, உள்ளூர் அமைச்சர் நேருவின் அதிரடியால, தி.மு.க., தரப்பு நகராட்சியை பிடிச்சு, மைக்கேலும் சேர்மன் ஆனாருங்க...


''கடந்த ரெண்டு வருஷமா மைக்கேல் செயல்பாடுகள்ல, அ.தி.மு.க., மட்டுமில்லாம, தி.மு.க., கவுன்சிலர்களும்வெறுத்துப் போயிருக்காங்க... அ.தி.மு.க.,வின் 11 கவுன்சிலர்களும்,சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செஞ்சிருக்காங்க...


''தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வர்றப்ப, தி.மு.க., கவுன்சிலர்களும், சுயேச்சை கவுன்சிலர்களும் ஆதரவு தர்றதா சொல்லியிருக்கிறதால, மைக்கேல் தலைக்கு மேல கத்தி தொங்குதுங்க...'' என முடித்தார்,அந்தோணிசாமி. பெஞ்சில் புதியவர்கள்அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement