மக்களை வதைக்கும் பிரச்சனை: தமிழக முதல்வர் ஆணையிடுவாரா ?
சென்னை: தமிழக முதல்வருக்கு காங்கிரஸ் மனித உரிமை பிரிவு மாநில தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
சென்னை அரும்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் வழியே பாலம் ஒன்று
அமைந்துள்ளது அப்பாலத்தின் கீழே சில வருடங்களுக்கு முன்பாக ஒரு U-Turn வழி
ஒன்று அமைந்திருந்தது அதன் பின்பு அந்த வழியானது மூடப்பட்டது. மூடிய
அந்த பாலத்தின் வழியின் கீழே அந்த இடத்தை ஆக்கிரமித்து செய்து
மாட்டுக்கொட்டையாக பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். அந்த வழியை
மறைப்பதற்காக அமைத்த இரும்பு தகரம் ஆனது உடைந்து மக்கள் பயணிக்கும்
சாலையோரம் அலங்கோலமாக கிடக்கின்றது. பலரை இது பதம் பார்க்கிறது. சாலை
ஓரத்தில் பயணிக்கும் மக்களுக்கு ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கியபகுதியில் ஆபத்து
அந்த மூடிய U-Turn வழியினால் சென்னையில் முக்கிய பகுதியில் இருந்து கோயம்பேடு
பகுதிக்கு செல்லும்போது இடையூறாக பொதுமக்களுக்கு அமைகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல் சிம்சன் உள்ள பகுதிகளில் பெரும் நெருக்கடி சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்களும் பல முக்கிய பிரமுகர்களும் வந்து செல்லும் இப்பகுதியில் எளிய வகையில் செல்லும் வகையில் மாற்ற வேண்டும். மூடிய பாலத்தினால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் அங்கு போக்குவரத்து இல்லாததால் சாலையோரம் செல்லும் மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை. சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் பேருந்துகளை அங்கு மக்களுக்கு இடையூறாக சாலை ஓரங்களில் நிறுத்தி விடுகின்றனர். சில வருடங்களுக்கு முன்பாக மூடிய இந்த U-Turn வழியை திறந்து வைத்தால் பொது மக்களுக்கு பயணிக்கும் விதமாக சிறப்பாக அமையும் என்ற நோக்கத்துடன் இந்த புகார் மனுவை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மேலும் இதைப் பற்றிய புகாரை கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை தலைமை இயக்குனருக்கு சமர்ப்பித்தேன் அதற்கு அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் இந்த புகார் மனுவின் மூலம் தாங்கள் முன்வந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு மகாத்மா ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.