தீபாவளி கொண்டாட்டத்தில் அசைவம், மது : மன்னிப்பு கோரியது பிரிட்டன் பிரதமர் அலுவலகம்

1

லண்டன்: பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஹிந்துக்களுக்கு அசைவ ஐயிட்டங்களுடன் பீர், ஒயின் போன்ற மதுபானம் வழங்கியதற்காக மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் நெ.10 டவுனிங் தெருவில் உள்ளது. இங்கு கடந்த அக். 29-ம் தேதியன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் அலுவலக ஊழியர்கள் மற்றும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற விருந்து நடைபெற்றது.

விருந்தில் அசைவ ஐயிட்டங்களுடன் பீர், ஒயின் போன்ற மதுபானங்களும் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னரே தெரியவந்தது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் எவ்வித பதிலும் வெளியிடவில்லை

இது தொடர்பாக பிரிட்டன் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து அதிருப்தி தெரிவித்தார். அவர் கூறியது, 'மது, மாமிசத்தால் பிரதமர் அலுவலக புனிதம் பாதித்து விட்டது. மிகுந்த வருத்தமளிக்கிறது. வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருந்தால், அது இன்னும் அதிகப்படியான சோகத்தை ஏற்படுத்தும் என்றார்.



இந்நிலையில் இன்று (15.11.2024) பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு மது, அசைவம் வழங்கியமைக்காக மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி விருந்து இரவு உணவு அட்டவணையில் இறைச்சி, பீர், ஒயின் முதலானவை இருந்தது பின்னர் தெரியவந்தது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என பிரதமர் அலுவலம் உறுதியளித்துள்ளது.

Advertisement