ரிசர்வ் வங்கி உதவி மேலாளர் மகளிர் குழுவினருக்கு பயிற்சி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் ஊராட்சியில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, வீட்டு மாடித்தோட்டம் அமைத்தல், ஆரி ஒர்க் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்பு குறித்து, சிறப்பு பயிற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த பயிற்சியை இந்திய ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் வம்சித ரெட்டி நேற்று ஆய்வு செய்தார். சுயதொழில் மூலமாக, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு தரம் குறித்து, பயிற்சியாளர்களுக்கும், சுய உதவி குழுவினருக்கும் விளக்கம் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார், இந்தியன் வங்கி மாவட்ட இயக்குனர் உமாபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement