போந்துாரில் வீட்டுமனை பட்டா மதுராந்தகம் ஆர்.டி.ஓ., ஆய்வு
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த போந்துார் கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், ஆதிதிராவிட கிராம நத்தம் வகைப்பாட்டை சேர்ந்த, 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், 86 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அரசு சார்பாக, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 86 குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இது, கிராம வருவாய் கணக்கு பதிவேட்டில் ஏற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று மதுராந்தகம் ஆர்.டி.ஓ., ரம்யா மற்றும் செய்யூர் தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாக்களை, கிராம வருவாய் கணக்கு பதிவேட்டில் பதிவேற்றம் செய்து, விடுபட்டோர், இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மீண்டும் பட்டா வழங்குவது குறித்து, நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.