போலீஸ் பாதுகாப்புடன் சென்னிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சென்னிமலை, நவ. 16-
சென்னிமலை நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக எழுந்த புகாரால், கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தினர். அவகாசம் கேட்டதால், நவ.,௧௫ம் தேதி வரை அனுமதி கொடுத்திருந்தனர். அவகாசம் நேற்று முடிந்தநிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பேரூராட்சி பணியாளர்கள், போலீஸ் பாதுகாப்புடன் சென்னிமலையில் பஸ் ஸ்டாண்ட், நான்கு ராஜவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் சென்னிமலை நகர சாலைகள் விஸ்தீரணம் அடைந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: இனி மேல் கடைக்காரர்கள், ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. அதேசமயம் முக்கிய ரோடுகளில் சாலை நடுவில் தடுப்பு அமைக்க வேண்டும். சென்னிமலை நகர சாலையை இருவழிச்சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும். கனரக லாரி போக்குவரத்தை குறைக்க, ரிங்ரோடு புறவழி சாலை திட்டத்தை விரைத்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement