குழந்தைகளுடன் தாய் மாயம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் முரளி, 28, கட்டட தொழிலாளி. இவர், புதுச்சேரியில் தங்கி சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷர்மிலி, 24. இவர்களுக்கு அர்சிஷா, 4, பத்மருவன், 4, என இரு குழந்-தைகள் உள்ளனர். கடந்த செப்.,15ல் ஷர்மிலி புதுச்சேரியில் இருந்த முரளிக்கு போன் செய்து, நடூரில் உள்ள பாட்டி முருகாயி வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு முரளி வந்தார். அப்போது தனது வீட்டிலும், பாட்டி வீட்டிலும் ஷர்-மிலி, இரு குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பாப்பி-ரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement