மின்வாரிய ஓய்வூதியர்கள் பண பலன் கேட்டு தர்ணா


மின்வாரிய ஓய்வூதியர்கள் பண பலன் கேட்டு தர்ணா
ஈரோடு, நவ. 16-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில், ஓய்வு கால பணப்பயன்களை வழங்க வேண்டும். கடந்த, 2003ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்து பணி ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றிய காலத்தை கணக்கீடு செய்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் ஈ.வி.என்., சாலையில் உள்ள, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. கிளை தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். மத்திய அமைப்பு மண்டல செயலாளர் ஜோதிமணி, கிளை பொருளாளர் சண்முகம், ஸ்ரீதேவி, குழந்தைசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் பேசினர்.
* கோபி மின் வட்ட கிளை சார்பில், வேட்டைக்காரன் கோவிலில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடந்தது. கிளை தலைவர் சம்பத் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement