சட்ட விழிப்புணர்வு முகாம்
திருத்தணி:திருத்தணி சுதந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தினத்தை ஒட்டி தாலுகா சட்டத்துறை குழு சார்பில், சட்டம் குறித்தான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பள்ளி தாளாளர் சியாமளா ரங்கநாதன் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் பேராசிரியர் வி.ரங்கநாதன் வரவேற்று பேசினார்.
இதில், திருத்தணி சார்பு நீதிமன்ற நீதிபதி மலர்கொடி பேசியதாவது:
தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதை மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் முழு கவனம் கல்வியில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சட்ட உதவி மைய வழக்கறிஞர் ஷாமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி முதல்வர் துரைகுப்பன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement