புதிய பள்ளி கட்டடம் கட்ட கோரி குழந்தைகளுடன் பெற்றோர் போராட்டம்
கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அருகே, பழுதடைந்துள்ள பள்ளி கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டக்கோரி, குழந்தைகளை பள்-ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த வெதரம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. 160க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமையாசிரியர் உள்பட ஆறு பேர் பணிபுரிகின்றனர்.
மொத்தம் மூன்று கட்டடங்கள் உள்ளன. இதில் இரு வகுப்ப-றைகள் கொண்ட ஒரு கட்டடத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, 54 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கட்டடத்தின் முன் மற்றும் மேற்பகுதி சிமென்ட் பூச்சு பெயர்ந்து, கம்பிகளுடன் ஆபத்தான நிலையில் உள்ளது. சிறிதளவு மழை பெய்தால் கூட தண்ணீர் ஒழுகுகிறது. சேதமடைந்துள்ள கட்ட-டத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டடம் கட்டக்கோரி, கிராம-மக்கள் மற்றும் பெற்றோர் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவல-கத்தில் பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எவ்வித நட-வடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று காலை, 9:00 மணிக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி நுழை-வாயில் முன், குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்-டனர். அரூர் மாவட்ட கல்வி அலுவலர் சின்னமாது, காரிமங்-கலம் தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் மொரப்பூர் பி.டி.ஓ.,க்கள் மணிவண்ணன், வடிவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஒரு மாதத்திற்குள் புதிதாக கட்டடம் கட்ட நடவ-டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும், புதிதாக கட்டடம் கட்டப்படும் வரை, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகள் அங்குள்ள உணவருந்தும் கூடத்தில் அமரவைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 12:30 மணிக்கு பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு, குழந்தை-களை வகுப்புக்கு அனுப்பி வைத்தனர்.