சிவன் கோவில்களில் அன்னாபிேஷகம்
தர்மபுரி: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று அன்னாபி ேஷகம் நடந்தது.
ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று, தர்மபுரி நெசவாளர் கால-னியில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவிலில் மாலை, 4:00 மணிக்கு மேல் பால், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் உள்-ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. 30 கிலோ அரிசியால் லிங்கத்துக்கு அன்னாபி ேஷகம், 10 கிலோ காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்-டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.இதேபோல், கொளகத்துார் புற்றிடம்கொண்டநாதர் கோவில், அதியமான்கோட்டை சோளேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்-வன்னநாதர் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதி-களில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபி ேஷகம் நடந்தது.
* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அமிர்தீஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் அன்னாபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது. ஏரா-ளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
* அரூர், வர்ணீஸ்வரி அம்மன் உடனமர் வர்ணீஸ்வரர் கோவிலில், நேற்று காலை அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு காய்கறிகள், பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. இதேபோல், அரூர் சந்தைமேட்டிலுள்ள வாணீஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்-சுண்டேஸ்வரர் கோவில்களில் சிவபெருமானுக்கு அன்னாபி-ஷேகம் செய்யப்பட்டது.