நடைபாதை கடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சியில், 35 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகரின் தென்மேற்கில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தின் எதிரே அரசு பொது மருத்துவமனையும் அதை ஒட்டி கோர்ட் வளாகமும் அமைந்துள்ளன.
பழமையான இந்த கோர்ட் வளாகம், தற்போது கைவிடப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் கோர்ட் வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள நெடுஞ்சாலை வழியாக திருத்தணி மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் இந்த சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில் பயன்பாட்டில் இல்லாத கோர்ட் வளாகத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நடைபாதை கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையோரம் நடைபெறும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.