கும்மிடிப்பூண்டியில் தொடர் மழை குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீர்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்த வரை, கடந்த மூன்று தினங்களாக அதிக மழை அளவு கும்மிடிப்பூண்டியில் பாதிவாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன், 6.5 செ.மீ., மழையும், நேற்று முன்தினம், 6 செ.மீ., மழையும் பாதிவாகியுள்ளது. நேற்று காலை நேரத்தில், விட்டு விட்டு மழை பெய்த நிலையில், மதியத்திற்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்ய துவங்கியது.
தாமரை ஏரியில் தேங்கி இருந்த கழிவுநீர் நிரம்பி வழிந்தததில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குரு கிருபா குடியிருப்பு பகுதிகளில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. நுர்நாற்றத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெளியேற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement