சிவன் கோவில்களில் அன்னாபிேஷகம்

திருத்தணி:திருத்தணி அடுத்த நாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமி ஒட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு, 200 கிலோ பச்சரிசி சமையல் மூலவருக்கு அன்னாபிேஷகம் மற்றும் பல்வேறு காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அன்னபிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

திருத்தணி அடுத்த தாடூர் கடலீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு காலையில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மதியம், ஒரு மூட்டை அரிசியால் சாதம் தயாரித்து மூலவருக்கு அன்னாபிேஷகம் நடத்தி வழிப்பட்டனர்.

திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர், திருக்குளம் சரவண பொய்கை அருகே உள்ள சிவன் கோவில், பழைய திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரர், மத்துார், அகூர் மற்றும் அருங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில்களிலும் அன்னாபிேஷகம் நடந்தது.

Advertisement