புதுச்சேரி பல்கலையில் கற்பித்தல் நிகழ்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரி சிறு குறு தொழில் நுட்ப மையம், ஏ.ஓ.டி.எஸ்., ஜப்பான், புதுச்சேரி பல்கலைக்கழகம் வணிகத் துறை இணைந்து, புதுச்சேரி பல்கலைக் கழக மாணவர்களுக்கு கைசென் அடிப்படையில் கற்பித்தல் நிகழ்ச்சியை நடத்தின.
ஏ.ஓ.டி.எஸ்., ஜப்பானைச் சேர்ந்த ஷினிச்சிரோ தஷிரோ, எய்ஜி டெஷிமா ஆகியோர் தலைமை தாங்கினார். மோனோசுகுரி தரம் மற்றும் கைவினைத்திறனுக்கான அர்ப்பணிப்பு குறித்து பேசினார்.
விழாவில், உலகளாவிய ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு அதன் முறையீட்டை விரிவுபடுத்துவது, இன்றைய போட்டி நிறைந்த வேலைச் சந்தையில் செழித்துச் செல்வதற்குத் தேவையான திறன்களைக் கொண்டு மாணவர்களுக்குத் இலவசப் படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
ஏற்பாடுகளை வணிகவியல் துறைத் தலைவர் அருள், புதுச்சேரி சிறு குறு தொழில்நுட்ப மையம் துணைப் பொது மேலாளர் அமித் நைன், ஜெயின் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் ரத்தன்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.