இரண்டாவது திருமணம் செய்த பெண் மீது போலீசார் வழக்கு
கரூர்: கரூர் அருகே, முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாவது திரு-மணம் செய்து கொண்ட பெண் உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கரைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார், 41; இவருக்கும், ஈரோடு மாவட்டம், சாலைப்புதுாரை சேர்ந்த முத்து செல்வி, 35; என்பவருக்கும் கடந்த, 2020ல் திரு-மணம் நடந்தது. ஏற்கனவே, முத்துசெல்விக்கு கார்த்திகேயன் என்-பவருடன் கடந்த, 2015ல் திருமணம் நடந்து, விவாகரத்து பெற்-றது, பிரதீப் குமாருக்கு தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முத்து செல்வி ஈரோடு குடும்பநல நீதி-மன்றத்தில் பிரதீப் குமார் மீது, தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில் 2023, நவ., 10ல் பிரதீப் குமாரின் சகோதரர் சந்தோஷ் குமாரின் மொபைல் எண்ணில், முத்து செல்வி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, பிரதீப் குமார் கடந்த மே, 6ல் கரூர் ஜே.எம்.,-2 நீதிமன்றத்தில் அளித்த புகா-ரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார், முத்து செல்வி, அவ-ரது தாய் பார்வதி, சகோதரர் சிவகிருஷ்ணன், உறவினர் நல்லுசாமி ஆகியோர் மீது, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.