மூலவைகை ஆறு படித்துறையில் குப்பை கொட்டுவதால் பாதிப்பு
தேனி : வருஷநாடு மூலவைகை ஆறு கண்டமனுார் வழியாக அம்மச்சியாபுரம் பாலத்தை கடந்து குன்னுார் பாலம் வழியாக வைகை அணைக்கு வந்தடைகிறது.
இதில் அம்மச்சியாபுரம் காளியம்மன் கோயில் பின்புறம் மூலவைகை ஆற்றின் படித்துறை உள்ளது. இந்த படித்துறை அம்மச்சியாபுரம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டது. ஆனால் மூலவைகை ஆற்றை பாழ்படுத்தும் நோக்கத்தில் இப்பகுதியில் தடுப்புச்சுவரின் ஓரங்களில் அதிகளவில் குப்பை, கோழிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி மூலவைகை ஆறு மாசடைகிறது. இங்கு குப்பை கொட்டுவதை கண்டு கொள்ளாமல் இருப்பதால் மூலவைகை ஆறு மாசடைவது தொடர்கிறது. மாசுபடாமல் தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement