வட்டாணம் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் சேதம்
தொண்டி : தொண்டி அருகே வட்டாணத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் சேதமடைந்துள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால் கூரை சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. மழை நீர் கசிவதால் கிராமப் பதிவேடுகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு வேலையாக இந்த அலுவலகத்திற்கு வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கட்டடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement