கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம்

கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், அன்னாபிேஷகம் விழா
நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில், அனைத்து சிவா-லயங்களிலும், அன்னாபிேஷகம் விழா நடப்பது வழக்கம். அதன்படி நேற்று மாலை, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மூலவர் பசுபதீஸ்வரர், நாகேஸ்வரர், கரிய மாலீஸ்-வரர் சிலைகளுக்கும், கரூர் உழவர் சந்தை எதிரே, விசாலாட்சி சமேத வஞ்சுலீஸ்வரர் கோவிலில் மூலவருக்கும் சிறப்பு அபி ேஷகம் மற்றும் அன்னாபி ேஷகம் நடந்தது. பிறகு, பக்தர்க-ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல், திருகாடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவில், நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில் களிலும் மூலவருக்கு, சிறப்பு அபிேஷகம் நடத்தப்-பட்டு, அன்னாபிேஷகம் செய்யப் பட்டது.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம், ஆளவந்-தீஸ்வரர் சிவன் ஆரணவல்லி அம்மன் கோவில் உள்ளது. இங்கு சிவன், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. சிவ-னுக்கு அன்னம், காய்கறிகளால் அலங்காரம் செய்து சிறப்பு வழி-பாடு பூஜை நடந்தது. பின், அன்னதானம் வழங்கப்பட்டது.
* லாலாப்பேட்டை, செம்போர்ஜோதீஸ்வரர் சிவன் கோவிலில் சிவனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளானோர் கலந்து கொண்டனர்.
* கருப்பத்துார், சிம்ம
புரிஸ்வரர் சிவன் கோவிலில் அன்னாபிேஷகம் நடந்தது.

Advertisement