ராஜவாய்க்கால் துார்வாரும் பணி மீண்டும் துவக்கம்

தேனி : தேனியில் ராஜவாய்க்கால் துார்வாரும் பணி மீண்டும் துவங்கியது.

இந்த ராஜவாய்க்கால் சில மாதங்களுக்கு முன் துார்வாரும் பணி நடந்தது. போதிய நிதி ஒதுக்கிடு இல்லாததால் நிறுத்தப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவ மழையில் ராஜவாய்க்கால் துார்வாராததால் நீர் தேங்கி தொற்று ஏற்படும் நிலை உருவாகும். அதனால் முழுமையாக துார்வாரும் பணிகளை முடிக்கவும், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 2 மாதங்களுக்குள்அறிக்கை அளிக்க வருவாய்த்துறை, நீர்வளத்துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பணிகள் நேற்று துவங்கி உள்ளன. முதற்கட்டமாக கம்பம் ரோடு வி.வி.ஜி., ஸ்டோர் முதல் பள்ளிவாசல் வரை அளவீடு பணிகளும், அதற்கடுத்து பழைய பஸ் ஸ்டாண்டு தண்ணீர் செல்லும் பாதையை துார்வாரவும் பணிகள் நடந்தன.

இதில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் ஆனந்த், தாசில்தார் சதிஷ்குமார், நகர நில அளவையர் கணேஷ்குமார், வி.ஏ.ஓ., ஜீவா ஆகியோர் மேற்பார்வையில் பணிகள் நடந்தன.

Advertisement