லாரி மோதிய விபத்தில் டிபார்ட்மென்ட் அதிபர் பலி

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, லாரி மோதிய விபத்தில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் அதிபர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்-தவர் மகேஷ், 38, டிபார்ட்மென்ட் ஸ்டோர் அதிபர்.
இவர் நேற்று முன்தினம் இரவு, சேலம் தேசிய நெடுஞ்சாலை செங்காட்டானுார் பிரிவில், காரை நிறுத்தி விட்டு, சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக குளித்தலை பெருக-மணி பகுதியை சேர்ந்த மணிகண்டன், 39, என்பவர் ஓட்டி சென்ற லாரி, மகேஷ் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த மகேஷ், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, மகேஷின் மனைவி ரம்யா, 31, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement