போலீஸ் ஸ்டேஷன் அருகே திருட முயன்ற வாலிபரை பிடித்த மக்கள்
கரூர்: பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, வீட்டில் திருட முயன்ற வாலிபரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்-தனர்.
கரூர் டவுன் போலீஸ் சரகத்துக்குட்பட்ட கரூர் டவுன், பசுபதிபாளையம், தான்தோன்றி-மலை, வெங்கமேடு ஆகிய போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாக உள்-ளது. இந்நிலையில், நேற்று காலை பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, நடுத்தெருவில் உள்ள காய்கறி வியாபாரி மணி, 50, என்பவரது வீட்டில், 25 வயதுடைய வாலிபர் பீரோவில் திருட முயற்சி செய்துள்ளார். அப்போது, வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் புகுந்த மணி, அவரது மனைவி லட்-சுமி ஆகியோர் திருடன், திருடன் என கூச்சலிட்டனர். இதனால், திருட வந்த வாலிபர் தப்பி ஓடினார். ஆனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாலிபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து, இரண்டு கைகளையும் பின்பக்கமாக கட்டினர். பிறகு, போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, பசுபதிபாளையம் போலீசார் விசாரித்ததில் திருட வந்தது கரூரை சேர்ந்த விஜய், 25, என்பது தெரியவந்தது. அவரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.