மா.கம்யூ., வாகன பிரசாரம்

காங்கேயம்: காங்கேயம் தாலுகா மா.கம்யூ., கட்சி சார்பில், காங்கேயத்தை அடுத்த சிவன்மலை கோவில் அடிவாரத்தில் வாகன பிரசாரம் நடந்தது.

தாலுகா குழு செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையை குறைக்க வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்-குதல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க வேண்டும். காவேரி கூட்டு குடிநீர் முறையாக கிராம மற்றும் நகர பகுதிக்கு, மூன்று நாட்க-ளுக்கு ஒருமுறை வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்-கைகளை வலியுறுத்தி பிரசாரம் நடத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், நத்தக்காடையூர் கிளை செயலாளர் செல்வராஜ், கமிட்டி உறுப்பினர் வின்சென்ட் உட்பட, 25 பேர் இருசக்கர வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டனர்.

Advertisement