20 பேருக்கு பணி ஆணை வழங்கல்
தேனி : தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு நேர்காணலில் பங்கேற்ற 20 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வேலை வாய்ப்பு முகாமில் ராயல் என்பீல்டு, ஹோண்டா, மேனகா டெக்ஸ்டைல் மில், நலம் பல்நோக்கு மருத்துவமனைகள் உட்பட 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரமாபிரபா தலைமை வகித்தார். இதில் ஆண்கள் 61 பேர், பெண்கள் 46 பேர் நேர்காணலில் பங்கேற்றனர்.
இதில் 13 ஆண்கள், 7 பெண்கள் உட்பட 20 பேர் தேர்வாகினர். தேர்வானவர்களுக்கு நிறுவன பிரதிநிதிகளுடன் இணைந்து பணி ஆணைகள் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement