தர்மபுரியில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா
தர்மபுரி: ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில், குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்க-ளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்வை, கலெக்டர் சாந்தி இலக்கியம்பட்டியில் தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில், ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தில், முதற்கட்டமாக, 2022ல் தர்மபுரி மாவட்டத்தில், 307 கடுமையான மற்றும், 430 மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய, ஆறு மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு, 1,044 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக, 2024--25ல் தர்மபுரி மாவட்டத்திற்கு, 52.75 லட்சம் ரூபாய் (ஒரு பெட்டகம் ரூ.2,265) மதிப்பில், 2,329 ஊட்டச்சத்து பெட்டகம் வந்துள்ளது. இதில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு-டைய, -ஆறு மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு, இரு ஊட்டச்சத்து பெட்டகமும் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு, ஒரு ஊட்டச்-சத்து பெட்டகமும் வழங்கப்படவுள்ளது.இரண்டாம் ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி, தர்மபுரி கலெக்டர் சாந்தி தலைமையில், இலக்கியம்பட்டி அங்கன்வாடி மையத்தில் நேற்று நடந்தது. தர்மபுரி வட்டாரத்தில், 416, அரூர், 217, காரிமங்கலம், 347, மொரப்பூர், 274, நல்லம்பள்ளி, 370, பாலக்கோடு, 178, பாப்பிரெட்டிபட்டி, 188, பென்னாகரம், 339 என, 2,329 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்ப-டவுள்ளது.
பா.ம.க., எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பவித்ரா, சி.இ.ஓ., ஜோதிசந்திரா உட்-பட பலர் கலந்து கொண்டனர்.