கிரஷரில் மின்சாரம் தாக்கி ஜார்க்கண்ட் வாலிபர் பலி
வானுார், : கிரஷர் தொழிற்சாலையில், மின்சாரம் தாக்கி, ஜார்க்கண்ட் வாலிபர் இறந்தார்.
கிளியனுார் அடுத்த பேராவூரில் தனியார் கிரஷர் தொழிற்சாலை உள்ளது. இங்கு, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மழை பெய்த போது, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மிலிட்டர் பியர் மகன் சுனில்குமார், 20; அங்கிருந்த வெல்டிங் இயந்திரத்தை மூட முயன்றபோது, மின்சாரம் தாக்கியதில், தூக்கி வீசப்பட்டார்.
உடன், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சுனில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார். கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement