ரூ.10,500 கோடி கடன் வாங்க எஸ்.பி.ஐ., திட்டம்
புதுடில்லி,: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இதுவரை இல்லாத பெரிய கடன் தொகையாக, 10,500 கோடி ரூபாய், அதாவது, 125 கோடி டாலர் கடன் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.பி.ஐ.,க்கு இந்த கடனை பெற்றுத் தருவதில், 'எச்.எஸ்.பி.சி., ஹோல்டிங்ஸ், சி.டி.பி.சி., பாங்க், தைபே பியூபான் வங்கி' ஆகியவை ஈடுபட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக்கூடிய இந்தக் கடன் குறித்து எஸ்.பி.ஐ., தரப்பில் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
வங்கிகளை பொறுத்தவரை, 75 கோடி டாலர் கடன் தான் இதுவரை அதிகபட்சமாக பெற்ற கடனாக இருந்தது. இதற்கு முன், 'பாங்க் ஆப் பரோடா' 75 கோடி டாலர் கடன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (4)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
16 நவ,2024 - 06:40 Report Abuse
திமுக இது போல பல லட்சம் கோடிகளை நிதிகளை முதலீடாக பெற்று வந்திருக்கிறது கூட தெரியாமல் இப்படி கவலைப்பட்டால் என்ன ஆகப்போகிறது.
0
0
Reply
அப்பாவி - ,
16 நவ,2024 - 06:03 Report Abuse
நிதியமைச்சகம் 2020 ல 20 லட்சம் கோடி குடுத்திச்சி. அதெல்லாம் அந்நிய முதகுட்டாளர்கள் ஸ்வாகா செஞ்சுட்டு வெளியேறியாச்சு. அடுத்த முறை 20 லட்சம் கோடியை விட அதிகமா குடுப்பாங்க. இந்தியா சூப்பர்னு அவிங்க திரும்ப வந்து முதலுடு செஞ்சு 2030 ல வெளியேறுவாங்க. rinse, wash, repeat.
0
0
Reply
அப்பாவி - ,
16 நவ,2024 - 06:03 Report Abuse
நிதியமைச்சகம் 2020 ல 20 லட்சம் கோடி குடுத்திச்சி. அதெல்லாம் அந்நிய முதகுட்டாளர்கள் ஸ்வாகா செஞ்சுட்டு வெளியேறியாச்சு. அடுத்த முறை 20 லட்சம் கோடியை விட அதிகமா குடுப்பாங்க. இந்தியா சூப்பர்னு அவிங்க திரும்ப வந்து முதலுடு செஞ்சு 2030 ல வெளியேறுவாங்க. rinse, wash, repeat.
0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
16 நவ,2024 - 05:37 Report Abuse
புரிஞ்சு போச்சு. அதை வாங்கி அதானி, அம்பானிக்குத்தானே கொடுப்பீங்க? அப்புறம் அதை வாராக்கடனில் சேர்த்து தள்ளுபடி செய்வீங்க. குட் அப்படித்தான் செய்யோணும்.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement