முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி இடம் தேர்வுக்காக அமைச்சர் ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கான இடம் தேர்வு குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து, வழுதரெட்டியில் அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் ஜெயச்சந்திரன், எஸ்.பி., தீபக் சிவாச், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement