நாட்டுப்புற இசைக்கலை  பெருமன்ற கூட்டம்  

சிவகங்கை : நாட்டுப்புற இசை கலைஞர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதற்குரிய நடைமுறையை எளிதாக்க வேண்டும் என சிவகங்கையில் தீர்மானம் நிறைவேற்றினர்.

சிவகங்கையில், தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்ற மாவட்ட குழு கூட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்ட தலைவர் ஆல்பர்ட் ராஜ் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் சேவியர் வரவேற்றார். மாநில பொது செயலாளர் கணேசன், மாநில துணை தலைவர் சுப்பிரமணியம், அமைப்பு செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தனர்.

சங்க நிறுவனர் மற்றும் மாநில தலைவர் வீரசங்கர் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட அளவில் 60 வயதை கடந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுத்தருவது. அரசு சார்ந்த விழாக்களில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முதன்மை வாய்ப்பு தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

கூட்டத்தில் சங்க மாவட்ட தலைவராக ஆல்பர்ட்ராஜ், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் சங்குபாண்டி, துணை தலைவர் மாஸ், துணை செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement