அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனராக பதவியேற்கப் போகிறார் துளசி; நிர்மலா சீதாராமன் வாழ்த்து
புதுடில்லி: அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள துளசி கப்பார்டுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் ஜனநாயகக் கட்சி பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தவர் துளசி கப்பார்ட். இவருக்கு வயது 43. 2022ம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகினார். 2024ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார். பைடன் அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். 21 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையில் பணியாற்றியுள்ளார். டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்கும் உதவியாக இருந்தார்.
இவரை, அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். துளசி கப்பார்டுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ள துளசி கப்பார்டுக்கு வாழ்த்துகள்.
முதல் ஹிந்து பெண்
21 வருடங்களாக நீங்கள் ஒரு சிப்பாயாக அமெரிக்காவிற்கு சேவை செய்தீர்கள். உங்களுடனான எனது சில உரையாடல்களில், உங்கள் தொலைநோக்கு பார்வை மற்றும் அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்டேன். நல் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமெரிக்க பார்லிக்கு தேர்வான முதல் ஹிந்து பெண் என்ற பெருமை கொண்டவர் துளசி என்பது குறிப்பிடத்தக்கது.